அன்பு காட்டுவோம்
ஒரு ஊரில் நல்ல வசதி படைத்த ஒரு மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் தினந்தோறும் ஒரு மலை அடிவாரம் வழியாக தன் வேலை ஸ்தலத்திற்கு செல்வது வழக்கம். அவ்வழி முழுவதும் பசுமையான புற்கள் நிறைந்து மிக அழகாக கட்சி அளிக்கும்.
அவர் தினந்தோறும் அவ்வாறு நடந்து செல்கையில் ஒரு சிறுவன் அப்புல் வெளிகளில் தன் ஆடுகளை மேய்த்து கொண்டு இருப்பதை கவனிப்பார். அந்த சிறுவன் ஆடுகளை மேய்த்தபடி இயற்கையை ரசித்து கொண்டு இருப்பான். இவருக்கும் இயற்க்கை கட்சிகளை ரசிப்பது மிகவும் பிடிக்கும் எனினும் ஒரு நாளும் அவர் அச்சிறுவனிடம் பேசியதோ அல்லது அச்சிறுவனை பார்த்து சிரித்ததோ கிடையாது.
ஒரு நாள் திடீரென்று அச்சிறுவன் தற்கொலை செய்து இறந்து போனான் என்பதை அறிந்தார் அம்மனிதர். மிகுந்த அதிர்ச்சி அடைந்த அவர் அச்சிறுவனின் இறபிற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அவன் வீட்டிற்கு சென்றார். அங்கே இருந்தவர்களிடம் அந்த சிறுவன் இறந்து போனதற்கு கரணம் என்னவென்று கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்கள் அந்த சிறுவனுக்கு அன்பு காட்ட ஒருவரும் இல்லை அதனால் தான் அச்சிறுவன் இறந்து போனான் என்று கூறினார்கள். அப்பொழுது தான் அம்மனிதர் தன் தவறை உணர்ந்தார். தினமும் அச்சிறுவனை சந்தித்த நான் அச்சிறுவனை அன்பாக விசாரித்திருந்தால் அச்சிறுவன் மறித்து போய் இருக்க மாட்டான் என்று எண்ணி மிகுந்த வேதனை அடைந்தார். ஆகவே நம்மால் முடிந்தவரை யாவரிடமும் அன்பு காட்டுவோம்.
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.